Stories
Saturday, 25 April 2020
Nallathangal story || Tamil old stories || RealTime stories
Tuesday, 27 August 2019
சரணாகதி
நீண்ட நாட்களாக பலர் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில்.......
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,
தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர்
உத்தவர்.
இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,
உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,
"உத்தவரே,
இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன்.
உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த பல கண்ணனின் லீலைகள்,
புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.
அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.
"பெருமானே ! நீ வாழச் சொன்ன
வழி வேறு;
நீ வாழ்ந்து காட்டிய வழி
வேறு !
நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்,
நீ ஏற்ற பாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில், எனக்குப்
புரியாத பல விஷயங்கள் உண்டு. அவற்றுக்கெல்லாம்
காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.
நிறைவேற்றுவாயா ?" என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்:
"கண்ணா !
முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.
கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பவை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கறிந்த
ஞானியான நீ
'உற்ற நண்பன் யார்’
என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று,
தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை?
போகட்டும்.
விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு
நீதி பாடம் புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.
தருமன்
செல்வத்தை இழந்தான்,
நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.
சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது,
நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை அவளைப் பணயம் வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன்.
அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.
மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போது தான் சென்று,
'துகில் தந்தேன்,
திரௌபதி மானம் காத்தேன்’ ஆடை தந்தேன், என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்டாய்.
மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய
மானம் என்ன அவளிடம் இருக்கிறது? அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது,
எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்
படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்?
ஆபத்தான இது போன்ற
சமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத,
நீ எப்படி ஆபத்பாந்தவன் ?
நீ செய்தது நியாயமா!தருமமா ?'
என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று,
மகாபாரதம் படித்த
நம் அனைவரின் உள்ளத்திலும் எழும் மனவலியோடு உணர்வு மிகுந்த கேள்விகளே இவை.
நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார்.
"உத்தவரே !
விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி.
துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை.
அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க,
கண்ணன் தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது.
'பணயம் நான் வைக்கிறேன்.
என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.
அது விவேகம்.
தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக
என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்'
என்று சொல்லியிருக்கலாமே
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் ?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?
அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா ?
போகட்டும்.
தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான். என்பதையாவது
மன்னித்து விடலாம்.
ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான்.
'ஐயோ ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே !
ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே !
அவன் மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’
என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான்.
நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே !
அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா ?
இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய,
என்னைக் கடைசி வரை கூப்பிடவேயில்லை !
நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல்,
'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம்’
எனக் குரல் கொடுத்தாள்.
பாஞ்சாலி.
அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அழைத்ததும்
சென்றேன்.
அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.
இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா !
அசந்து விட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை.
உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா ?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால் தான் நீ வருவாயா ?
நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு
வரமாட்டாயா ?"
புன்னகைத்தான்,
கண்ணன்.
"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை.
நான் வெறும் 'சாட்சி பூதம் மட்டுமே,
நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே !
அது தான் தெய்வ தர்மம்" என்றான்.
நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!
அப்படியானால்,
நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
அப்படித்தானே?"
என்றார் உத்தவர்.
உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக
உணர்ந்து பாருங்கள்.
நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உண்மையில் உணரும் போது மட்டும்
தான் உங்களால் தவறுகளையோ,
தீவினை செயல் களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.
அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான்,
எனக்குத் தெரியாமல் இது அது என ஏதாவது தீவினையை நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது
செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான்.
எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே,
அதுதான் அவனது
அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால்,
இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?"
என்றான்,
ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.
ஆகா! ஆகா!
எத்தனை உள்ளர்த்தம் வாய்ந்த அருமையான ஆழமான தத்துவம்!
பகவானைப் பூஜிப்பதும்,
பிரார்த்தனை செய்வதும்,
அவனை உதவிக்கு அழைப்பதும்,
ஓர் உணர்வுதானே !
"அவனின்றி ஓர்
அணுவும் அசையாது"
என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில்
நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்?
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும் ?
இந்த தத்துவத்தை தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
மொத்தத்தில் இறைவன் நமக்கு உணர்த்துவது யாதெனில் என்னை "சரணாகதி" அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை என்பதுதான்.
Tuesday, 27 November 2018
எது கெடும் ?!?
01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...
திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.
மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...
ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.
இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.
அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.
நம்ம வியாபாரிகளையும் பாதுகாப்போம்..!!!
# *கஜா புயலுக்கு 1கோடி நிதி வழங்கினார் நம்ம சரவணா ஸ்டோர் ஓனர்*#
# *வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக ஐயா திரு.முத்துஇராமலிங்கம் 1கோடி* #
# *ராம்ராஜ் காட்டன் ஓனர் 45லட்சம் மதிப்புள்ள உடைகள் கொடுத்து உதவினார்*#
உதவியது எல்லாம் நம்ம உள்ளூர் வியாபாரிகள் தான்...😍😍😍
#அமேசான் ஓனரோ#
#பிளிப்கார்ட் ஓனரோ#
#ஸ்நாப்டீல் ஓனரோ#
இல்ல....
*நல்லா புரிஞ்சுக்க மக்களே*
#ஆன்லைன் -ல் #பொருள் வாங்குவதை குறைத்து#
*நம்ம வியாபாரிகளையும் பாதுகாப்போம்..!!!!*
👍🤝🙏
ஜியோ சிம்
திருமணம் ஆகி முதல் மனைவியுடன் ஒழுங்காகக் குடித்தனம் நடத்திய ஒருவன், திடீரென ஒரு சின்ன வீடு செட்டப் செய்கிறான். கடைசியில் மனைவியைக் கவனிக்காமல் சின்ன வீட்டின் மேலேயே அக்கறை கொள்கிறான்..
ஜியோ சிம் உபயோகிக்கும் அனைவருமே இந்த ரகத்தைச் சேர்ந்தவர்களாக மாறி விட்டார்களோ? எனத் தோன்றுகிறது..
கவனிப்பாரற்றுக் கிடந்த மனைவி போல, வடஃபோன், ஐடியா, ஏர்டெல் நம்பர்கள் ஆகிவிட்டன..
கடைசியில் மனைவி கோர்ட்டுக்குப் போய் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடுத்து, மாதா மாதம் ஒரு தொகையை ஜீவனாம்சமாக வழங்க கோர்ட் உத்தரவிட்டது போல, அந்த கம்பெனிகள் (ஜியோ, பி.எஸ்.என்.எல் தவிர) 28 நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனச் சொல்லி விட்டன..
படித்ததில் மனதே கலங்கிய பதிவு
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து
வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.
ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு
அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு
ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை
செய்கிறேன். ஆனால் நான் செய்யும்
வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.
மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட
வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது
உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே
சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.
பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை
மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.
இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.
புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று
வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம்
மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.
கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது.
அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.
மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம்
திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின
உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான்.
“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன்
அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.
வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை.
உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.
வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும்
மாட்டிற்கு கண்களில் நீர் வர
தொடங்கியது. “எஜமான்! நீங்கள்
செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன்.
இல்லாவிடில் நான் நீண்ட காலம்
ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.
அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது
துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில்
சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு
இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள்
தனத்தை எண்ணி நொந்து கொண்டது.
நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் √
படித்ததில் மனதே கலங்கிய பதிவு