Friday, 27 October 2017

Devil story

நள்ளிரவு நேரம்......
கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று Politicians பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 1.American Politician, 2.Russian Politician.3.Tamil Nadu Politician.
திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.
"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது.மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.
ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது."உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன்.
அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்.
"மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்
American politician தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.
Russian politician தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.
பேய் சிரித்தது.
"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"
உடனே Tamil Nadu Politician தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு ...
"இந்த தண்ணீரை கொண்டு வா !"
என்றான்....பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.
நீதி :-
இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவர்
Tamilnadu politician.
💀Tamilnadu politicians💀

No comments:

Post a Comment